காட்பாடி அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பரிதாப உயிரிழப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி கம்மவார்புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி தமிழச் செல்வம் (26) இவர் காலை காலைக்கடன் முடிப்பதற்காக. பிரம்மபுரம் சஞ்சீவராயபுரம் மலையடிவாரத்திற்கு சென்றார்.அப்போது இங்கு உள்ள நிலத்தில் பன்றிகளை பிடிப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இது சமமந்தமாகபள்ளிகுப்பத்தை சேர்ந்த செந்தூர் மற்றும் வேலுவை கைது செய்தனர்.