நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பழைய வத்தலக்குண்டு பட்டாளம்மன் கோவில் சாமி கும்பிடுதல் சம்மந்தமாக இருதரப்பு இடையே ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக சமாதான கூட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தனுஷ்கொடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பின்வருமாறு முடிவுகள் எடுக்கப்பட்டது: பட்டாளம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் என்றும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவிழா நடைபெறும்போது எந்தவிதமான பிரச்சினைகளில் ஈடுபட மாட்டோம் இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தனர். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர்கள் சென்னா கிருஷ்ணன், அங்குசாமி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்’ நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா