Home செய்திகள் இருதய சிகிச்சையில் மீண்டும் சாதனை படைத்துள்ளது மதுரை அப்போலோ மருத்துவமனை.

இருதய சிகிச்சையில் மீண்டும் சாதனை படைத்துள்ளது மதுரை அப்போலோ மருத்துவமனை.

by mohan

மதுரை நவீன சிகிச்சையில் முன்னோடியாகத் திகழும் மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, இருதய சிகிச்சையில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இயற்கையாக தானே கரையக்கூடிய (BRS – Bioresorbable Stent) ஸ்டென்ட்டை தென் தமிழகத்தில் முதன்முறையாக பொருத்தி வெற்றிகரமாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்து சாதனை படைத்துள்ளது.இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கு முக்கிய காரணியாக திகழ்வது இருதய இரத்த நாள நோய் (Coronary Artery Disease) ஆகும். உலக அளவில், இருதய இரத்த நாள நோயால் ஏற்படும் இழப்புகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது இருதய இரத்த நாள நோயினால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கையும் மேற்கத்திய நாடுகளை விட தமிழகத்தில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்பில்லாது அமர்ந்த நிலையிலேயே அதிக நேரம் செலவிடும் வேலை முறை இவற்றைத் தவிர நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பரவல் இவையனைத்தும் இந்திய இளைஞர்களிடையே அதிக இருதய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்களுக்கும் இருதய இரத்த நாள நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் விவேக் போஸ் தனது அனுபவத்தில் 25 சதவீதத்துக்கும் மேல் இளைஞர்கள் அதிக அளவில் இருதய இரத்த நாள நோய் பாதிப்புக்குள்ளாவதாக கூறினார்.உயர் இரத்தஅழுத்தம் கொண்ட 41 வயதுடைய நோயாளி நெஞ்சில் சிறு அசௌகரியம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு வழக்கமான ஈசிஜி மற்றும் எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு மற்றும் தொடர் நெஞ்சு வலியின் காரணமாக அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. ஆஞ்சியோகிராபியில் அவருக்கு இடது இரத்த நாளத்தில் ஒற்றை அடைப்பு மற்றும் இரத்தக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அவரது வயது மற்றும் இரத்தக் கட்டி இருப்பதை கருத்தில் கொண்டு, மருத்துவர் விவேக் போஸ் மற்றும் அவரது குழுவினர், அந்த இளைஞருக்கு சமீபத்தில் செயல்பாட்டிற்கு வந்த இந்திய தயாரிப்பான இயற்கையாகவே தானே கரையக்கூடிய ஸ்டென்ட்டை பயன்படுத்த திட்டமிட்டனர். வழக்கமாக பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உலோகத்தால் ஆனவை. மேலும் நிரந்தரமாக உடலின் உள்ளேயே இருப்பவை.’கரையக்கூடிய ஸ்டென்ட்’ என்பது இயற்கையாகவே கரையும் பொருளால் ஆனது. இரண்டு மூன்று வருடங்களில் கரைந்து மறைந்து போகக் கூடியவை. அடைப்பைக் கரைத்து இரத்த நாளத்தை விரிவடையச் செய்தபின், சிகிச்சை அளித்த இரத்த நாளத்தின் உட்சுவரை குணப்படுத்துவதை ஊக்குவிக்கும் வேலையையும் மிகச் சிறப்பாக செய்கிறது. மெரில் லைப் சயின்சஸ் நிறுவனத்தின் MeRes 100 BRS என்பது உலகின் முதல் 100 மைக்ரான் அளவுள்ள மெல்லிய Stent அடுக்குகள் ஆகும் இது இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் (DCGI – Drug Controller General of India) ஒப்புதல் மற்றும் ஐரோப்பாவின் CE ஒப்புதல்களைப் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய ஆராய்ச்சியில் இதன் நேர்மறை பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இருதய சிகிச்சையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களும் பயன்பெறலாம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மருத்துவ நிர்வாகி டாக்டர். பிரவீன் ராஜன், டாக்டர். நிகில் திவாரி நிர்வாக பொது மேலாளர் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் கே. மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!