போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்டம் சார்பில் வடக்கு மாவட்டம் அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட தலைவி கதிஜா பீவி தலைமையில் நடைபெற்றது..

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட பொது செயலாளர் ஜியாவுதீன் ஒருங்கிணைப்பில்பொதுமக்கள் அதிகமாக கூடும்! கடைவீதி பஸ் ஸ்டாப் பகுதிகளில் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் மத்தியில் துண்டு பிரச்சாரம் வினியோகம் செய்து போதையற்ற சூழல் உருவாக்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள் தொடர்ச்சியாக மதுரையில் பல்வேறு இடங்களில் அக்டோபர் 30வரை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்..விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்ட துணை தலைவிஆபிதா பேகம், பொருளாளர் சகோதரி லைலத் பீவி,தெற்கு தொகுதி தலைவி பாத்திமா சிக்கந்தர், ஆகியோர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் வடக்கு தொகுதி தலைவி செய்யதலி பாத்திமா,நன்றி கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்