Home செய்திகள் புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக விண்வெளி வார விழா.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக விண்வெளி வார விழா.

by mohan

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 08.10.2021ல் உலக விண்வெளி வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நெல்லை.சு.முத்து கலந்து கொண்டு விண்வெளியில் இந்தியாவின் சாதனை குறித்து பேசினார். மேலும் அவர் பேசுகையில் உலக விண்வெளி வாரம், இந்த ஆண்டு விண்வெளியில் பெண்கள் என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, எவ்வாறு படிப்படியாக வளர்ந்தது குறித்து தெளிவாக கூறினார். முதலில் நமது செயற்கைக்கோளை வெளிநாட்டு ஏவுகலன் மூலமாக செலுத்திக்கொண்டு இருந்தோம். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா ஏப்ரல் 19, 1975ல் ரஷ்யா ஏவுகலன் மூலமாக செலுத்தப்பட்டது. ஆனால் இப்போது பிப்ரவரி 15, 2017 ல் 102 செயற்கைக்கோளை செலுத்தி உலக சாதனை படைத்தது உள்ளோம்.இன்சாட் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு, தொலைவகுப்பு(ஆன்லைன்) போன்ற பல சேவைகளை பெற பயன்படுகிறது. IRS செயற்கைக்கோள் இயற்கை வளம், பேரிடர் மேலாண்மை போன்ற பல சேவைகளை பெற பயன்படுகிறது. இன்று வரை 128 இந்திய செயற்கைக்கோள் மற்றும் 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள் செலுத்தி வரலாற்று சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது. செயற்கைக்கோள் செலுத்துவதில் உலக அளவில் இந்திய 5ம் இடத்தில் உள்ளது. மேலும் 2023ல் ககன்யான் திட்டம் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது. 1967 இஸ்ரோ ஆரம்பித்த போது 7 கிலோ விண்வெளிக்கு செலுத்தினோம்.ஆனால் இப்போது 640டன் விண்வெளிக்கு அனுப்புகிறோம். நிலவில் ஒரு பொருளை தரையிறக்க வேண்டும் என்று அப்துல் கலாம் கேட்டதற்கு இணக்க சந்திரயான்-1 மூலம் நிலா மோது கலன் மூலம் நிலாவில் செலுத்தினோம். மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 மூலம் கண்டறிந்துள்ளோம். நிலாவில் உள்ள ஹீலியம்-3 ஐசோடோப்பை பயன்படுத்தி, அணு சக்தி மூலம் ஏவுகலன் மற்றும் ஏவு ஊர்தி இயக்க முடியும். மேலும் அப்துல் கலாம் கூறிய ஊக்கமூட்டும் சிந்தனைகள் பற்றியும் விண்வெளி வேலைவாய்ப்புகள் குறித்தும் தெளிவாக கூறினார்.முன்னதாக கல்லூரி முதல்வர் அ.ரா. பொன்.பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் சிறப்பு விருத்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!