உசிலம்பட்டி – ஆக்கிரமிப்பு பிடியில் அசுவமாநதி கண்மாய் . மீட்க அரசுக்கு கோரிக்கை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்குதொடர்ச்சி மலைபகுதியில் உள்ளது வேலப்பர் கோவில் மலைப்பகுதி. இந்த பகுதியிலிருந்தும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்தும் மழைக்காலங்களில் மலைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஊற்றுக்கள் மூலம் நீர்வரத்து அதிகரித்து வாசிமலை அடிவாரப்பகுதியில் உள்ள அசுவமாநதி கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடும். உசிலம்பட்டி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அசுவமாநதி கண்மாயினை மினி அணை கட்ட திட்டமிட்டனர். அதற்கான பணிகளையும் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த திட்டம் அப்போதைய அரசு கைவிட்டது. இதனால் அசுவமாநதி கண்மாயில் சிறிய தடுப்பணைகள் மட்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த அசுமாநதி கண்மாயில் நீர் பெருகி அங்கிருந்து அசுவமாநதி வரத்து கால்வாய் மூலம் செட்டியபட்டி, குஞ்சாம்பட்டி கண்மாய் வழியாக கருக்கட்டான்பட்டி, உசிலம்பட்டி கண்மாய் வழியாக தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் உள்ளது. இந்த அசுவமாநதி வரத்து கால்வாய்கள் 100 அடிக்கு மேல் உள்ளது. ஆனால் இந்த வரத்து கால்வாய்கள் அனைத்தும் தனிநபர் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. ஆக்கிரமிப்புக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேல் இருந்தாலும் இதனை அகற்ற இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகளும்,பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அசுவமாநதி கண்மாய் மற்றும் அசுவமாநதி வரத்து கால்வாய்கள் அனைத்திலும் மணல் கொள்ளையர்கள் மணல்கொள்ளையடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனையும் அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அசுவமாநதி கண்மாயிலஜருந்து வரத்து கால்வாய் உசிலம்பட்டி வழியாக சென்று அம்பட்டையம்பட்டியில் உள்ள திருமங்கலம் பிரதான கால்வாயில் இணைகிறது. இதன் தொலைவு சுமார் 25கிலோ மீட்டர் தொலைவு என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அசுவமாநதி கண்மாய் மற்றும் அசுவமாநதி வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென 58கிராம இளைஞா்கள் குழுவின் சாா்பாக சௌந்திரபாண்டியன் தலைமையில் சமூகஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered