Home செய்திகள் மக்கள் நீதி மய்யம் இளைஞரணி சார்பாக திருப்பரங்குன்றத்தில் 500 ஏழை எளிய குடும்பத்திற்கு 5 கிலோ அரிசியை நிவாரணமாக வழங்கினர்.

மக்கள் நீதி மய்யம் இளைஞரணி சார்பாக திருப்பரங்குன்றத்தில் 500 ஏழை எளிய குடும்பத்திற்கு 5 கிலோ அரிசியை நிவாரணமாக வழங்கினர்.

by mohan

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் நிவாரணம்  வழங்கி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலு விளாச்சேரி, திருநகர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதியில் ஊரடங்கால் தவிக்கும் ஏழை எளிய 500 குடும்பங்களுக்கு இளைஞரணி சார்பாக 5 கிலோ அரிசியை நிவாரண பொருளாக வழங்கினர்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொது வாரத்திற்கு முழு ஊரடங்கை  தமிழக அரசு பிறப்பித்தது. முழு ஊரடங்கினால் உணவின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகளை சார்ந்த தானார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் 500 ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கிய மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் செயலாளர் அழகர், இளைஞரணி செயலாளர் பரணி ராஜன் ஆகியோர் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!