இலக்கியங்களே பண்பாட்டின் ஆணிவேர்கள்” இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம்..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம், மருதம் நெல்லி கல்வி குழுமம்,ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தருமபுரி, சங்க இலக்கிய ஆய்வு நடுவம் தருமபுரி இணைந்து “இலக்கியங்களே பண்பாட்டின் ஆணிவேர்கள்” என்ற பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இணைய வழியில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்திற்கு நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். சங்க இலக்கிய ஆய்வு நடும தலைவர் பெரம்பலூர் முனைவர் சே.சுரேஷ் வரவேற்புரை வழங்கினார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சி.காமராஜ் முன்னிலையுரை வழங்க, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தொடக்கவுரையாற்றினார்.

தொடர்ந்து இலங்கை சபரகமுவ பல்கலைக் கழக சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடம்,மொழிகள் துறை விரிவுரையாளர் நாகரத்தினம் சுதர்ஷினி “பாரதியார் கவிதைகளும் தமிழர் பண்பாடும் “என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னை கலைமாமணி முனைவர் பால.இரமணி “கம்பனில் கலையும் கலையாத பண்பாடும் “என்ற தலைப்பிலும் உரையாற்றினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தொகுப்புரையும், நன்றியுரையும் வழங்க முதல் நாள் நிகழ்ச்சி நிறைவடைந்தது. மேலும் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தலைமையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பெ.இரகுநாதன் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா. வேலம்மாள் “தமிழர் நாகரிகமும் சங்க இலக்கியங்களும் “என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து,பண்பாட்டுத் தொடர்ச்சியாக நவீனத்துவமும் தமிழரின் வெற்றியும் “என்ற தலைப்பில் இலண்டனில் குடியிருந்து வரும் கவிஞர் புதுயுகன் உரையாற்றினார். நிறைவாக, அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி நன்றியுரை வழங்கினார். இரண்டு நாட்களாக இணையவழியில் நடைபெற்ற இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகள், விருது நகர் வே.வ.வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி, செந்தமிழ் கல்லூரி ,மதுரை, தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி,கீழக்கரை, தென் திருவிதாங்கூர் கல்லூரி, நாகர்கோயில், ராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,புதுவை,snmv கலை மற்றும் அறிவியல் கல்லூரி.கோவை, நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,பராசக்தி மகளிர் கல்லூரி,குற்றாலம் உட்பட தமிழகத்திலுள்ள பல கல்லூரிகளின் பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் உட்பட பல நாட்டுத் தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply