வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியாளர் அன்பழகன் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின்படி வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அதனைத்தொடர்ந்து அப்பகுதிகளில் இயற்றிய வங்கிகள் அரசு அலுவலகங்கள் வணிக வளாகங்கள் ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் காய்கறி வியாபார சந்தை மக்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவிக்கப்பட்டது வெளியே வரும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் வாடிப்பட்டி பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர்

….செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image