வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் – போராளி நந்தினி.

வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 25 நாட்கள் கால அவகாசம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ஆகையால் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்க வேண்டும் என்று சமூக போராளி நந்தினி வேண்டுகோள்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தனது தந்தை ஆனந்தனுடன் இணைந்து போராளி நந்தினி இன்று, வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவை அறிவிக்க 25 நாட்கள் தாமதிப்பது பலவித முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் எனவே உடனடியாக வாக்குகளை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க கோரி இந்தப் போராட்டம் நடத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.வாக்கு எண்ணிக்கை மையங்களில் எந்தவித பாதுகாப்பும் கிடையாது. தற்போது தேர்தல் முடிவடைந்து பத்து நாட்கள் ஆகின்றன. நிறைய இடங்களில் மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கன்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று வருகின்றன. அங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை ‌ வாக்கு இயந்திரங்களை மாற்றுவதற்கான சூழல் தமிழ்நாடு முழுவதும் நிலவுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு 15 நாட்கள் உள்ளன. இதற்கிடையில் என்னென்ன முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெரியவில்லை.பிற மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கும் இங்கு நடைபெறுகின்ற தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேலும் தற்போது நடைபெற்ற போது நாடாளுமன்ற தேர்தலும் கிடையாது. அந்தந்த மாநிலங்களில் மக்கள் வாக்களிக்கிறார்கள் தங்களுக்குரிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகையால் இங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பது நியாயமில்லை. இதில் முறைகேடு நடத்துவதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆகையால் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக துவங்க வேண்டும். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் ஆனால் மக்கள் வாக்களித்தவர்கள்தான் வரவேண்டும். வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து வரக்கூடாது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image