தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த நபர் கைது; தனிப்படையினர் அதிரடி..

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தென்காசி , பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் இதர பகுதிகளில் வீடு உடைத்து திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருட்டை தடுக்கும் பொருட்டும் மற்றும் கண்டுபிடிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் IPS உத்தரவின் பேரில், தென்காசி உட்ககோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், தென்காசி காவல் நிலைய குற்ற ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் த.கா கோபி , ஜோஸ் முத்தையா பாண்டியன், வடிவேல் முருகன்,கருப்பசாமி, முருகன் , அருள்ராஜ், அலெக்ஸ், சீவலமுத்து, முத்துக்குமார்,
மற்றும் கார்த்திக் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்தது.அப்போது நாகப்பட்டினம் அக்கரைக் கீழ்குளம் ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவரின் மகன் மனோஜ்(24) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தென்காசி நகர பகுதிகள், பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் மனோஜ் அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடு உடைத்து திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். மனோஜிடமிருந்து திருட்டுச் சொத்துக்களான 330 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்கள் சகிதம் மொத்த மதிப்பு ரூபாய் 12லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மனோஜின் கூட்டாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளியை விரைந்து கைது செய்து திருட்டு சொத்துக்களை கைப்பற்றியதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படைக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image