Home செய்திகள் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்

ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்

by mohan

மதுரைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீன்கள் வருகின்றன. அந்த மீன்களில் பார்மாலின் ரசாயனம் மருந்து கலந்து மீன்கள் விற்கப்படுவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பெரும்பாலும் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விரைவில் அழுகும் தன்மை உடையது. அதனால் கடலில் மீன்களை பிடித்ததும் மீனவர்கள் 24 மணி நேரத்திற்கு கரைக்கு கொண்டு வருவது வழக்கம். கடலில் சூடை மீன். நகரை மீன் .ஊளி மீன். சீலா மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கடலில் கிடைக்கின்றன. இந்த மீன்கள் அழுகாமல் இருக்க ஐஸ் மூலமாக பதப்படுத்தப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனா். இதில் நீண்ட நாட்கள் வைத்து விற்பனை செய்ய வியாபாரிகள் ஆசைப்பட்டு அது கெடாமலிருக்க மீன்களை பார்மாலின் ரசாயனத்தில் மூழ்க வைத்து எடுக்கின்றனா். இப்படி பார்மாலின் கலவையில் மூழ்கி எடுக்கப்படும் மீன்கள் 15 நாட்கள் வரை அழுகாமல் ஐஸ் வைத்திருக்க முடியும். ரசாயனம் கலந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் இரைப்பை பெருங்குடல் சிறுகுடல் சிறுநீரகம் கண். உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டிற்கு தென்மாவட்டங்களில் இருந்து ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மீன்கள் அதிகமாக வருகின்றன இங்கு வரும் மீன்கள் ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் சுமார் 20 அதிகாரிகள் எட்டு ஆய்வாக ஊழியர்களுடன் பரிசோதனைக்கு தேவையான உபகாரங்கள் உடன் திடீரென்று கரிமேடு மீன் மார்க்கெட்டில் உள்ள 53 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மீன்கள் இறால் நண்டு ஆகிய மீன்களில் பல்வேறு சோதனைகள் விடுபட்ட பின்பு ரசாயனம் கலந்த 2 டன் மீன் நண்டு இறால் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது முதல் தடவை என்பதால் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் செய்கின்றோம். இனிமேல் அடுத்தடுத்து சோதனை நடக்கும் அந்த சோதனையில் ரசாயனம் கலந்த மீன்கள் பிடிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!