10 நாளுக்கு பின் தொழிலுக்கு சென்ற விசைப்படகுகள்

தமிழக கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசியது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. மன்னார் வளைகுடா கடலில் வழக்கத்தை காற்றின் வேகம் அதிக இருந்தது. இதனால் படகுகள் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சீதோஷ்ண நிலை பாதிக்காத பாக் ஜல சந்தி கடலில் தொழிலுக்கு செல்ல அனுமதிக்குமாறு ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதி விசைப்படகு சங்க பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். மீன்வளத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததை தொடர்ந்து மீனவர் சங்க பிரதிநிதிகள் மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தை படி 10 நாளுக்கு பின் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகுகள் இன்று காலை தொழிலுக்குச் சென்றன.

கடந்த 8ந்தேதிக்கு பிறகு ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் , கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி உள்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று (18.7.18) காலை வழக்கம் போல மீன்பிடிக்க சென்றதால் 10 நாட்களாக வெறிச்சோடிய கடற்கரை பரபரப்பாக காணபட்டது