மூன்று நாள் தொடர் மழையில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று தினங்களாக கோடை காலத்தை வரவேற்கும் விதமாக அடை மழை பெய்தது.  இதனால் மக்கள் மனதும், நிலங்களும் குளிர்ச்சி ஆனது.
ஆனால் செயல்பாடு இல்லாமல் இருக்கும் நகராட்சியை நினைத்து மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.  அதிகாரிகள் இல்லாத நிர்வாகம், சீர் இல்லாத நிர்வாகமாகவே மாறியுள்ளது.
மழை பெய்து மூன்று நாட்கள் ஆகியும் சாலைகளில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை சீராக்க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை.  டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்கனவே மொத்த குத்தகைக்கு கீழக்கரையில் இருந்து வரும் வேலையில், நகராட்சியின் இது போன்ற அலட்சிய போக்கு மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
உறங்கி கிடக்கும் நகராட்சி இப்பொழுதாவது விரித்துக் கொள்ளுமா??

1 Comment

  1. கீழை நியூஸ் சுட்டிக்காட்டிய செய்தியின் கரு தவறானது கீழக்கரை நகராட்சி கடந்த இரண்டு நாட்களாக மழை நீரை இடைவிடாமல் அப்புறப்படுத்திதான் வருகின்றனர். நீங்கள் சுட்டிக்காட்டிய பகுதி தண்ணீரை காட்டிலும் சேறு படிந்துதான் இருக்கிறது அவற்றை முழுமையாக சுத்தம் செய்ய சொல்லிதான் நீங்கள் செய்தியை பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் சுட்டிக்காட்டிய பகுதி சமீபத்தில்தான் சாலை புதிப்பிக்கப்பட்டுள்ளது அவ்விடத்தில் சேரும், சகதியும் வருவதற்கு யார் காரணம்? நகராட்சி நிர்வாகம் லட்சங்களையும் கோடிகளையும் கொட்டி வசதிகளை செய்து கொடுத்தாலும் வீடு கட்டுவதற்காக கற்கள் மணலை கொட்டுவது அதை முழுமையாக அப்புறபடுத்து கிடையாது இப்படி இருந்தால் சாலை சாலையாகவா இருக்கும் மழை பொழிந்தால் சேரும் சகதியும்தான் வரும் பின்னே ஏன் நகராட்சியை சாடுகிறீர்கள். இருந்தாலும் கீழக்கரை நகராட்சி இவ்வூர் மக்களுக்கு வைக்க போகிறது பெரிய ஆப்பு சுத்தம், சுகாதாரம், பொதுமக்களுக்கு இடையூறு, சாலையில் மணல், ஜல்லி,கற்களை கொட்டுதல் போன்றவற்றிற்கு அதிரடி அபராதம் விதிக்க இருக்கிறது. விரையில் அமலுக்கு வரும் எதிர்பார்த்து கொண்டிருங்கள் கீழக்கரை நகர மக்களே!

Comments are closed.