Home செய்திகள் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் பி. மூர்த்தி:

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் பி. மூர்த்தி:

by mohan

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 ஆனையூர், கூடல்நகர் மற்றும் மண்டலம் 2 திருப்பாலை, கண்ணனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பணியினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, துவக்கி வைத்து பேசியதாவது :தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்கீழ் அனைத்து துறைகளிலும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி ,மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளான கூடல்நகர், ஆனையூர், சம்பந்தர் ஆலங்குளம், திருப்பாலை, கண்ணனேந்தல், பரசுராமன்பட்டி, ஆத்திக்குளம், உத்தங்குடி, நாகனாகுளம் ஆகிய பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்து சாலைகள் சேதமடைந்ததாலும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் மழைக்காலங்களில் பல்வேறு சாலைகளில் சேதமடைந்து இருப்பதாலும் அந்த சாலைகளை மேம்படுத்த மூலதன மானிய நிதி2021-22 ஆண்டு மற்றும் 2021-22 ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 103 தார் சாலைகளை ரூ.16.32 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் யாவும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்வெங்கடேசன், ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், நகரப்பொறியாளர் (பொ)அரசு, உதவி ஆணையாளர்தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர்  பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர்ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், சுகாதார அலுவலர்ராஜ்கண்ணன், உதவிப் பொறியாளர்சுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!