Home செய்திகள் மீவிண்மீன் வெடிப்புகளை அண்டவியல் ஆய்வுகட்குப் பயன்படுத்தி விரிவுறும் அண்டம் முடுக்கமுறுதலைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஆடம் இரீசு பிறந்த தினம் இன்று (டிசம்பர் 16, 1969).

மீவிண்மீன் வெடிப்புகளை அண்டவியல் ஆய்வுகட்குப் பயன்படுத்தி விரிவுறும் அண்டம் முடுக்கமுறுதலைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஆடம் இரீசு பிறந்த தினம் இன்று (டிசம்பர் 16, 1969).

by mohan

ஆடம் கை இரீசு (Adam Guy Riess) டிசம்பர் 16, 1969ல் வாசிங்டன், டி.சி.யில் பிறந்தார். நியூஜெர்சியில் உள்ள வாரன் நகரில் வளர்ந்தார். கப்பல் பொறியாளரான இவரது தந்தை மைக்கேல் இரீசு இங்கு பிசுட்ரோ பன்னாட்டகம் எனும் உறைபதன உணவுக் குழுமத்துக்கு உரிமையாளராக இருந்தார். இவரது தாயாரான டோரிசு இரீசு மருத்துவ உளவியலாளராக இருந்தார். இரீசு வாட்சங் இல்சு வட்டார உயர்நிலைப் பள்ளியில் பயின்று 1988ல் பள்ளிக்கல்வியை முடித்தார். 1987ல் பெயர்பெற்ற ஜெர்சி ஆளுநர் பள்ளியில் அறிவியல் பயின்றார். பின்னர் இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பயின்று 1992ல் பட்டம் பெற்றார். அங்கு இவர் பை டெல்டா தீட்டா குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தன் முனைவர் பட்டத்தை ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் 1992ல் பெற்றுள்ளார். இதில் 20 புதிய வகை மீவிண்மீன்வெடிப்புகளின் அளவீடுகள் பொதிந்துள்ளன. மேலும் இதில் இடையில் உள்ள துசு, இயல்பான சீரின்மைகளுக்கான திருத்தம் அமைந்த LA வகை மீவிண்மீன்வெடிப்புகளைத் துல்லியமான தொலைவு சுட்டிகளாகப் பயன்படுத்தும் புதிய முறையும் அடங்கியுள்ளது.

இவரது முனைவர் ஆய்வு இராபர்ட் கிர்சுனர் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. இது வானியலுக்கு இயல்புக்கு மாறானவகையில் வானியலுக்குப் பங்களித்ததால் 1999 ஆம் ஆண்டின் இராபர்ட் ஏ. டிரம்பிளர் விருதைப் பெற்றது. இரீசு 1999ல் விந்தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்துக்குச் செல்லும் முன் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மில்லர் ஆய்வுநல்கையைப் பெற்றுவந்துள்ளார். இவர் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் உள்ள தற்போதைய பதவியை 2005ல் பெற்றார். மேலும் இழ்சா பரிசு வானியல் விருது தேர்வுக் குழுவிலும் இவர் உள்ளார். இரீசு பிரையான் சுக்கிமிடுடன் இணைந்து 1998ல் உயர்-Z விண்மீன்வெடிப்புக் குழுவுக்குத் தலைமை வகித்தார். 1A வகை மீவிண்மீன்வெடிப்புகளைக் கண்காணித்து, விரியும் அண்டம் இப்போது முடுக்கம் உறுகிறது என இக்குழு முதன்முதலில் அறிவித்தது. இக்குழுவின் நோக்கீடுகள் அண்ட விரிவு ஒடுக்க நிலையில் உள்ளதாக்க் கருதும் இக்காலக் கோட்பாட்டு நிலைப்பாட்டுக்கு முரணாக அமைந்தது.

மாறாக புவியில் இருந்து மீவிண்மீன்வெடிப்புகளில் இருந்துவரும் ஒளியின் செம்பெயர்ச்சியை அளந்து பல பில்லியன் ஆண்டுகட்கு முந்தைய மீவிண்மீன்வெடிப்புகளும் முடுக்கமுற்று வருதலை இக்குழு கண்டுபிடித்தது. இம்முடிவு மீவிண்மீன்வெடிப்பு அண்டவியல் திட்டம் வழியாக ஒருங்கே பெர்ல்மட்டராலும் கண்டுபிடிக்கப்பட்ட்து. இந்த இரண்டு ஆய்வுகளின் ஒருமித்த முடிவு முடுக்கமுறும் அண்டக் கோட்பாடு பொது கருத்தேற்பு பெற வழிவகுத்தது. இதனால் புடவியின் தன்மை பற்றிய புதிய ஆய்வுகள் முடுக்கப்பட்டன. கருப்பு ஆற்றல் நிலவுவதை நிறுவியது. இந்த முடுக்கமுறும் அண்டக் கோட்பாட்டின் கண்டுபிடிப்பு 1998ல் அறிவியல் இதழால் அறிவியலின் மிகப்பெரும் அருஞ்செயலாக அறிவித்தது. மேலும் 2011 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு இரீசுக்கும் சுக்கிமிடுக்கும் பெர்ல்மட்டருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதுவரை மாந்தரினம் காணாத மீவிண்மீன்வெடிப்புகளைக் காண, அப்புள் தொலைநோக்கியால் உயர் ZSN தேட்ட்த் திட்ட்த்தின் தலைமை வகித்தார். இவரது குழு 10 பில்லியன் ஆண்டுகட்கு முந்தைய புடவியின் விரிவை ஆய்வு செய்த்து. இது தொடக்கநிலை ஒடுக்கமுறும் விரிவைக் கண்டுபிடித்தது. இதனால் தொலைவில் உள்ள மீவிண்மீன்வெடிப்புகள் சற்ரே பொலிவோடு நிலவுவது அறியப்பட்டது. இந்நிலை இப்போது நம்பும் கணிசமான மீவிண்மீன்வெடிப்புகள் மங்குவதாக்க் கருதும் சிந்தனைக்கு முற்றுபுள்ளி வைத்த்து. மேலும் இம்முடிவு கருப்பு ஆற்றல்- கரும்பொருண்மப் புடவிப் படிமத்தை மீவிண்மீன்வெடிப்புகளின் ஆய்வால் நிறுவி உறுதிபடுத்தியது. இரீசு பசிபிச் வானியல் கழகத்தின் இராபர்ட் ஜே. டம்பிளர் விருதை 1999ல் பெற்றுள்ளார். மேலும் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின்போக் பரிசையும் 2001ல் பெற்றுள்ளார். இவர் 2003ல் அமெரிக்க வானியல் கழகத்தின் எலென் பி. வார்னர் பரிசையு பெற்றுள்ளார்.இரேமாண்டு பிவெர்லி சாக்ளர் பரிசை 2004 இல் தன் அண்ட முடுக்க ஆய்வுக்காகப் பெற்றார்.

இரீசு 2006ல் வானியலுக்கான ஒரு மில்லியன் டாலர் இழ்சா பரிசை சௌல் பெர்ல்மட்டர், பிரியான் பி. சுக்கிமிடு ஆகியோரோடு இணைந்து அண்ட முடுக்க ஆய்வுக்காகப் பெற்றார். சுக்கிமிடுவும் உயர் Z குழுவின் உறுப்பினர்களும் 2007 இல் மீவிண்மீன்வெடிப்புத் திட்ட்த்தில் 500,000 டாலர் குரூபர் அண்டவியல் பரிசை விரிவுறும் அண்டம் முடுக்கமுறுவதைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றனர். இவர் 1998 இல் மெக் ஆர்த்தர் அறிதிறனர் நல்கையைப் பெற்றார். இவர் 2009ல் தேசிய அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். விரிவுறும் அண்டம் முடுக்கமுறுதலைக் கண்டுபிடித்ததற்காக, இவர் பெர்ல்மட்டர், சுக்கிமிடு இருவரோடு இணைந்து 2011 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இரீசும் பிறையன் சுக்கிமிடுவும் உயர்-Z குழுவும் 2015 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் பரிசை அடிப்படை இயற்பியலுக்காற்றிய பங்களிப்புக்காகப் பெற்றனர். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!