Home செய்திகள் தமிழக முன்னாள் வருவாய் துறை அமைச்சருக்கு பாரதி புரஸ்கார் விருது ,எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் வழங்கினார்.

தமிழக முன்னாள் வருவாய் துறை அமைச்சருக்கு பாரதி புரஸ்கார் விருது ,எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் வழங்கினார்.

by mohan

மதுரையில் பாரதியார் பிறந்த நாளையொட்டி, பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களுக்கு பாரதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதில் ,தமிழக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உட்பட 25 பேருக்கு பாரதி புரஸ்கார் விருது எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் வழங்கினார்.பாரதியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில், பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் மதுரை ஹோட்டல் ராம் ரத்னா ரெசிடென்சியில், பார்வையற்றோருக்கு 10 கிலோ அரிசி மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாரதி புரஸ்கார் என்ற விருது வழங்கப்பட்டது. பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எஸ். பார்த்தசாரதி தலைமை தாங்கினார். தொழிலதிபர் மதியழகன் முன்னிலை வகித்தார்.விழாவில், 100க்கும் மேற்பட்ட பார்வையற்றோருக்கு 10 கிலோ அரிசி பை வழங்கப்பட்டது. மேலும் ,பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 25 பேருக்கு பாரதி புரஸ்கார் எனும் விருது வழங்கப்பட்டது. இதனை, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் வழங்கினார். பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி வாழ்த்துரை வழங்கினார்.விழாவில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை யாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது: பாரதியாரின் பாடல்களுக்கு கருத்துக்களை எழுத தற்போதும் மொழி தமிழறிர்கள் திணறுவதாகவும், ஒரு புரட்சியாளராக, கவிஞராக பாரதி நாட்டுக்கு சேவையாற்றியவர் என பேசினார். மேலும், அதிமுக ஆட்சியில் 4368 மழை பாதிப்பு இடங்களை கண்டறிந்து, அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள முதல் உதவிக்குழு தயார் நிலையில் வைத்திருந்தோம். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செயல்பட்டோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும், 200 ஆண்டுகளுக்கு பின்னால் 100 செ.மீ மழை என்பது பெய்துள்ளது. அது அரசுக்கு சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, மக்களுக்கு உதவ வேண்டும் என்பது கோரிக்கை என பேசினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!