மண் திருட்டில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரத்துடன் 2 லாரிகள் பறிமுதல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே முசுவனூத்து அருகில் உள்ள ஒரு கண்மாயில் கிராவல் மண்ணை ஜேசிபி இயந்திரத்துடன் 2 லாரிகளில் மணல் அள்ளுவதாக நிலக்கோட்டை தாலுகாவில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் பாண்டியம்மாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கிராவல் மண் அள்ளிய லாரியையும் ஜேசிபி இயந்திரத்தையும் கைப்பற்றி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வர முயன்றபோது சிறுநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த முத்து என்பவர் வருவாய் ஆய்வாளர் பாண்டியம்மாள் , கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கொடியிடம் வருவாய் ஆய்வாளர் பாண்டியம்மாள் புகார் கொடுத்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ்யிடம் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ் கொடி சிறுநாயக்கன்பட்டி சேர்ந்த முத்து என்பவர் அரசுப் பணி செய்ய விடாமல் அதிகாரியை கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா