காரியாபட்டி கம்பிக்குடி கால்வாய் அடைப்பு இரு மாவட்ட மக்களிடையே பிரச்சனை: அதிகாரிகள் பேச்சுவார்த்தை.

நிலையூர் கால்வாயில் கம்பிக்குடிக்கு வரும் வரத்துக் கால்வாயை அடைத்ததால், ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுகாண அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.மதுரை மாவட்டம் நிலையூர் கால்வாயிலிருந்து மதுரை மாவட்டம் வழியாக காரியாபட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ஆலோசனையின்பேரில், அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கை யால் காரியாபட்டி ஆவியூர், மாங்குளம் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தினர் வரத்துக்கால்வாயை அடைத்தனர். இதனால், காரியாபட்டி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் வராததால், விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் செய்தனர். இதனால், இரண்டு கிராம மக்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தகவல் கிடைத்தும், திருமங்கலம் ஆர்.டி.ஓ. வனிதா தாசில்தார் கர்ணன், காரியாபட்டி தாசில்தார் தனக்குமார் இன்ஸ்பெக்டர் மூக்கன் ஆகியோர் இருதரப்பிரி டையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, மதுரை, விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தி 2 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்