நிலக்கோட்டை தாலுகாவில் தி. மு. க. அமைச்சரின் முன்னாள் உதவியாளர் தொழிற்சாலைக்கு சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில், குன்னு வாராயன்கோட்டை ஊராட்சி பகுதியில் ஒரு தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை திண்டுக்கல்லில் உள்ள கனரா வங்கியில் 11 கோடி கடன் வாங்கி நிலுவையில் உள்ளது. இந்த நிலைமையை பலமுறை வங்கி நிர்வாகம் தொழிற்சாலை நிர்வாகிகளிடம் வசூலிக்க முயன்றும் இயலாததால் திண்டுக்கல் சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை 11 மணி அளவில் நீதிமன்ற கமிஷனர் கணபதி தலைமையில் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த தனியார் தொழிற் சாலையைசீல் வைக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டனர் அப்போது அங்கு வந்த தொழிற்சாலைகளின் உரிமையாளரான அருண் மற்றும் அவரது தந்தை தி. மு. க. அமைச்சர் ஒருவரின் முன்னாள் நேர்முக உதவியாளராக பணியாற்றிய தங்கவேல் மற்றும் அவரது வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் உட்பட பலர் திரண்டு நீதிமன்றம் நியமித்த கமிஷனர் கணபதி மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எங்களது தொழிற்சாலையை மூட அனுமதிக்க முடியாது என்று கூறி கடுமையாக அவ்வளவு அசிங்கமாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து நீதிமன்ற கமிஷனர் கணபதி விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாவிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா