இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு தின நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ரெட்டைகுளம் பகுதியில் பத்திரிகை அதிபர் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு தினம் நிகழ்ச்சி நடந்தது. இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் அறிவுறுத்தல் மற்றும் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் ஆலோசனையில் பத்திரிகை அதிபர் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சூரிய பிரகாஷ் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட ராமச்சந்திர ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், அச்சன்புதூர் இளைஞரணி செயலாளர் முருகன், ஊர் நாட்டாமைகள் கணபதி நாடார், முருகையா மற்றும் ஒன்றிய தலைவர் நாகராஜ் வர்த்தக அணி சின்னத்துரை, விவசாய அணி ரத்தினம் நாடார், சுய தொழில் பிரிவு வெங்கடேஷ், இளைஞர் அணி பால் தங்கம், நிதிப்பிரிவு லோகநாதன், பெப்சி சிவகுருநாதன், செல்லபாண்டியன், நயினார் நாடார், சங்கரபாண்டியன், மாடசாமி நாடார், கணபதி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்