அரசு பள்ளியில் மரம் நடு விழா மற்றும் உலக கை கழுவுதல் தின விழா

அப்துல்கலாம்  90வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக 9 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் உலக கை கழுவுதல் தினம் இன்று கொண்டாடப்பட்டது .விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை  இந்திரா காந்தி  தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும் பள்ளியில் பயிலக் கூடிய மாணவர்கள் இந்நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து மரக்கன்றுகளை நட்டு அதற்கு பாதுகாப்பு வேலி அமைத்து பங்காற்றினார்கள்.மரக்கன்றுகளுக்கான ஏற்பாட்டினை தீபம் இந்தியா அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பு செய்திருந்தது.மேலும் இன்று உலக கை கழுவும் தினமும் பள்ளியில் கொண்டாடப்பட்டது.கை கழுவுவதன் அவசியத்தினை பற்றியும் கை கழுவுதல் முறையையும் பற்றியும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சதக்கத்துல்லா  செய்திருந்தார்கள்.