Home செய்திகள் பலத்த காற்றுடன் மழை .உயர் மின் அழுத்த கம்பியில் மீது மரம் சாய்ந்து விழுந்தது .

பலத்த காற்றுடன் மழை .உயர் மின் அழுத்த கம்பியில் மீது மரம் சாய்ந்து விழுந்தது .

by mohan

பலத்த காற்றுடன் மழை உயர் மின் அழுத்த கம்பியில் மீது மரம் சாய்ந்து விழுந்தது. துரிதமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு .மதுரை மாநகரில் நேற்று பல இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன .அதில் ஒரு பகுதியாக மதுரை மாடக்குளம் பிரதான சாலையில் மாலை 5.45 மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது மாடக்குளம் சாலையில் அமைந்துள்ள சர்ச் அருகே ராட்சத மரம் ஒன்று கீழே விழுந்தது. அது உயரழுத்த மின்கம்பியில் மீது விழுந்து சாலையில் உயர் அழுத்த மின்கம்பி விழுந்துகிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பழங்காநத்தம் மின்வாரிய அதிகாரி ரவி தகவல் தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரி உடனடியாக பசுமலை மின் பகிர்மான கழகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் மின்வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் கிடந்த மரக் கிளைகளை அகற்றி உயர் மின் அழுத்த கம்பியை மீண்டும் மின் கம்பத்தில் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் மேல் மின்சாரம் தடைபட்டது. கொட்டும் மழை என்று பாராது மின்வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டதால் உயர் மின் அழுத்த கம்பியில் மீது யாரும் மிதிக்காமல் மின் இணைப்பை துண்டித்து விடும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .இதனால் அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!