சோளிங்கர் அருகே லிப்ட் கேட்டு காரில் சென்ற சென்ற 2 பெண்களிடம் 10 சவரன் நகை அபேஸ்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த சுஜாதா (45) இவரது உறவினர் புவனம் மாள் (65)இவர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தனர்அப்போது அங்கு கார் வந்தது அதில் வந்த டிரைவர் கார் பள்ளிகொண்டா வரை செல்கிறது. பஸ் கட்டணத்தை கொடுத்தால் போது நான் உங்களை இறக்கிவிடுகிறேன் என்று கூறி உள்ளான்.இதை நம்பி 2 பேரும் காரில் ஏறினர்.கார் வேலூரை நோக்கி வரும்போது புவனம்மாளின் கழுத்தில் இருந்த நகையை பறித்து உள்ளான்.காரை ஓட்டியப்படி பெண்களை தாக்கி உள்ளான்.
தொடர்ந்து பெண்கள் கூச்சலிட்டும் பயன் இல்லை.பள்ளிகொண்டா டோல்கேட்டில் மாட்டிக்கொள்வோம் என்ற நினைத்த அவன் மீண்டும் காரை வேலூருக்கு திருப்பி உள்ளான்.வேலூர்சத்துவாச்சாரி மேம்பாலத்தில் செல்லும்போது இருவரும் கதவை திறந்து குதித்து உள்ளனர்.சத்துவாச்சாரி போக்குவரத்து காவலர் மற்றும் அங்கு வேலை செய்துகொண்டு இருப்பவர்களாலும் அந்த காரை பிடிக்க முடியவில்லை.சத்துவாச்சாரி காவல்துறைக்கு உடனடி தகவல் சொல்லியும் அவர்கள் விரைவாக செயல்படவில்லை.விரட்டி சென்றும் காரை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை.காயம் அடைந்த இருவரையும் காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.சிசிடிவி மூலம் காரை ஆய்வு செய்த காவல்துறையினர் காரின் பதிவு எண் போலி என தெரியவந்தது.காரில் தப்பி சென்ற மர்ம ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal