கீழக்கரை கடை வீதிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு ….

தமிழகம் முழுவதும் கொரோணா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டு அதன் அடிப்படையில் நாளை (06/05/2021) முதல் கீழக்கரையில் செயல்படும் அனைத்து காய்கறிகளிலும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும் என்று இன்று (05/05/2021)கீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில் கீழக்கரை இந்து பஜாரில் உள்ள காய்கறி மார்க்கெட்டை நாளை முதல் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றுமாறு கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் நகராட்சி ஆணையாளர் பூபதி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் வியாபாரிகளிடம் நேரில் கூறினார்கள்.