Home செய்திகள் சட்டமன்ற பொதுத்தேர்தல்; தென்காசி மாவட்டத்தில் 72.58% வாக்குப்பதிவு.

சட்டமன்ற பொதுத்தேர்தல்; தென்காசி மாவட்டத்தில் 72.58% வாக்குப்பதிவு.

by mohan

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் 72.58 சதவீத வாக்குப்பதிவானது. தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி)தொகுதியில் 2,53,310 வாக்காளர்களும், வாசுதேவநல்லூர் (தனி)தொகுதியில் 2,41,109 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 2,89,940 வாக்காளர்களும், தென்காசி தொகுதியில் 2,92,168 வாக்காளர்களும், ஆலங்குளம் தொகுதியில் 2,60,429 வாக்காளர்களும் ஆக மொத்தம் 13,36,956 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதிகளில் 1,884 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வாக்குப்பதிவு மையங்களுக்கு 1,584 காவல்துறையினர், 168 துணை இராணுவ வீரர்கள், 250 ஊர்க்காவல் படை மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து 250 காவல்துறையினரும் நியமிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 1,025. வெப்கேமராக்கள்பொருத்தப்பட்டுகண்காணிக்கப்பட்டது.தேர்தல்பணிக்காக வருவாய்த்துறை 834 பணியாளர்கள், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுடன் 9,044 பணியாளர்கள், பொது சுகாதாரத்துறையின் மூலம் தன்னார்வ அமைப்புகளிலிருந்து 3,768 நபர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. காலையில் இருந்தே விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் காலை 9 மணி வரை 10.15 சதவீதமும், 11 மணி வரை 26.93 சதவீதமும், பிற்பகல் 1 மணி வரை 43.44 சதவீதமும், மாலை 3 மணி வரை 56.47 சதவீதமும், மாலை 5 மணி வரை 67.37 சதவீதமும், இரவு 7 மணி வரை 72.58 சதவீதமும் வாக்குப் பதிவானது.இரவு 7 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 1,884 வாக்குப் பதிவு மையங்களிலும் வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. இதன் பின்னர் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து போலீஸ், துணை இராணுவ படை வீரர்களின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தென்காசி கொடிக்குறிச்சி யூஎஸ்பி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தனி அறையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 72.58 சதவீதம் வாக்குகள் பதிவானது. மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,53,310 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,81,051 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இது 71.47 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.வாசுதேவநல்லூர்(தனி) சட்டமன்ற தொகுதியில்; மொத்தம் உள்ள 2,41,109 வாக்காளர்களில் 1,73,287 பேர் வாக்குப் பதிவு செய்துள்ளனர். இது 71.87 சதவீத வாக்குப் பதிவு ஆகும்.கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,89,940 வாக்காளர்களில் 2,03,141 பேர் வாக்குப் பதிவு செய்துள்ளனர். இது 70.06 சதவீத வாக்குப் பதிவு ஆகும்.தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,92,168 வாக்காளர்களில் 2,11,344 பேர் வாக்குப் பதிவு செய்துள்ளனர். இது 72.33 சதவீத வாக்குப் பதிவு ஆகும்.ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,60,429 வாக்காளர்களில் 2,01,575 பேர் வாக்குப் பதிவு செய்துள்ளனர். இது 77.40 சதவீத வாக்குப் பதிவு ஆகும்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!