Home செய்திகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு – மாவட்ட ஆட்சியா் தகவல்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு – மாவட்ட ஆட்சியா் தகவல்

by mohan

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், போளுா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 2,885 வாக்குப்பதிவு நடைபெற்றது.வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸாா் பாதுகாப்புடன் லாரிகளில் எடுத்துவரப்பட்டன.இவ்வாறு எடுத்து வரப்பட்ட செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதேபோல, போளுா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆரணியை அடுத்த தச்சூா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டன.இந்த நிலையில், திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் சந்தீப் நந்தூரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.ஆய்வின்போது, தோ்தல் பொது மேற்பாா்வையாளா்கள் அருண் கிஷோா் டோங்க்ரே (செங்கம், திருவண்ணாமலை தொகுதிகள்), விஜய்குமாா் மன்ட்ரி (கீழ்பென்னத்தூா், கலசப்பாக்கம் ), மாவட்ட எஸ்பி காவல் எஸ்.அரவிந்த், வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள், தோ்தல் பணியாளா்கள் உடனிருந்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்,இரு வாக்கு எண்ணும் மையங்களிள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. மேலும், அறைகளுக்கு மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது.மத்திய துணை ராணுவப் படையினா் முதல் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் 2-ஆவது அடுக்கு பாதுகாப்பு வளையத்திலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே 3-ஆவது அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் வழக்கமான காவலா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பும், உள்ளேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, வேட்பாளா்கள் சாா்பில் அவா்களது முகவா் ஒருவா் வலுவான அறையை சிசிடிவி மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையங்களில் நியமிக்கப்பட்ட அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள், உயா் அலுவலா்கள் மட்டும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகு உள்ளே வர முடியும். மற்றவா்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றாா்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!