கீழக்கிடாரம் அல் மதரஸா நூருல் ஹிதாயா முதலாமாண்டு பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரம் அல் மதரஸா நூருல் ஹிதாயா முதலாமாண்டு பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மதரஸாவின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மார்க்க கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊர் ஜமாத்தார் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பட்டமும், பரிசும் வழங்கப்பட்டது.

இதில் ஆலிமா மற்றும் முபல்லிஹா பட்டத்தை ஹாஜா முகைதீன் மகள் பெனாசிர் அஸ்மா பெற்றார். அதே போல் முபல்லிஹா பட்டத்தை லைலத்துல் கத்ரிய்யா                      (த/பெ.முகம்மது ஜலாலுதீன்), ஜிப்ரிய்யா (த/பெ.முஹையித்தீன் பிச்சை), ஆஸிகா பேகம் (த/பெ.அப்துல் ஜப்பார்), ஸபானா பேகம் (த/பெ.லியாகத் அலி) ஆகியோர் பெற்றனர்.

மேலும் இவ்விழாவில் கீழக்கிடாரம் ஜமாத் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.