பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து கணினி முறை ஒதுக்கீடு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்,அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021ல்பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்துஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட கணினி முறை ஒதுக்கீடுநடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் தெரிவித்ததாவது:சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2021 பணிகளுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றதொகுதிகளில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 357 வாக்குச்சாவடி மையங்களும், திருவாடானைசட்டமன்ற தொகுதியில் 417 வாக்குச்சாவடி மையங்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 431வாக்குச்சாவடி மையங்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 442 வாக்குச்சாவடி மையங்களும்என 1647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுகின்றன. அதேபோல, முதல்நிலைபரிசோதனை நிறைவேற்றப்பட்டு, 3,206 வாக்குச் செலுத்தும் இயந்திரங்களும் , 1,966வாக்குப்பதிவு இயந்திரங்களும் 2,232 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களும்ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைகூட சேமிப்பு கிட்டங்கி பாதுகாப்பு அறையில்வைக்கப்பட்டுள்ளன.தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்துவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம்அறிவுறுத்தியுள்ள கணக்கீட்டின்படி, வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையிலிருந்து, வாக்குச்செலுத்தும் இயந்திரங்கள் 20 சதவிதமும், வாக்குப்பதிவு இயந்திரம் 20சதவிதமும், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரம் 30 சதவிதமும் கூடுதலாக கையிருப்பு இருக்கும் வகையில் கணினி முறை ஒதுக்கீடு செய்யப்பபடுகிறது. பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 429 வாக்குச்செலுத்தும் கருவிகளும், 429வாக்குப்பதிவு இயந்திரங்களும், 465 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களும், திருவாடானைசட்டமன்ற தொகுதிக்கு 501 வாக்குச்செலுத்தும் கருவிகளும், 501 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 543வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 518
வாக்குச்செலுத்தும் கருவிகளும், 518 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 561 வாக்காளர் சரிபார்க்கக்கூடியஇயந்திரங்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 531 வாக்குச்செலுத்தும் கருவிகளும், 531வாக்குப்பதிவு இயந்திரங்களும், 575 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களும் தேவை எனகணக்கிடப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம்வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட சேமிப்பு கிட்டங்கி பாதுகாப்பு அறையிலிருந்து ஆயுதமேந்தியகாவல் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில்வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் தெரிவித்ததார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர்.பழனிகுமார், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறுப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) சி.ரவிச்சந்திரன்,வட்டாட்சியர் (தேர்தல்) பொன்.கார்த்திகேயன் உட்பட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image