சுரண்டை பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பயிற்சி முகாம்..

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் ஆலோசனையின் பேரில் டெங்கு தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு டெங்கு நோயை தடுப்பது, லார்வா கொசு வளரும் இடங்களை கண்காணிப்பது அதனை கண்டுபிடித்து அழிப்பது, டெங்கு நோய் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவி பெற ஆலோசனைகள் வழங்குவது குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்‌. முதுநிலை பூச்சியியல் வல்லுநர் ராமலிங்கம் மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் சற்குணம், மாவட்ட தொற்றா நோய் ஒருங்கிணைப்பாளர் கோகுல். பேரூராட்சி இளநிலை பொறியாளர் கோபி, தொழில்நுட்ப உதவியாளர் தர்மலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், பிட்டர் முருகன், தூய்மை மேற்ப்பார்வையாளர்கள் ராமர், ஜெயபிரகாஷ், மற்றும் மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கலந்து கொண்டனர். முடிவில் சசிகுமார் நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image