திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற – மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்.

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தென் மண்டல பொதுக்குழு மாநாடு நடைபெற்றதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தென்கிழக்கு மண்டல பொதுக்குழு மாநாடு நடைபெற்றது .
இதில் மனித நேய மக்கள் கட்சிமாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார், முன்னிலையில மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது,மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.காதர் மைதீன்மாநில அமைப்பு செயலாளர் வரவேற்புரை கூறினார்.மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மனித நேய மக்கள் கட்சி சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.பொதுக் குழு கூட்டத்தில் திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற,வேளாண் சட்டத்தை திரும்ப பெறுதல்.தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய,சமையல் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட 21 நிர்மான்ங்கள் நிறைவேற்றப்பட்டன.மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 80 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.திருப்பரங்குன்றம அருகே அவனியாபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு மாநாட்டில் தலைவர் ஜவஹிருல்லாஹ் பேட்டி .மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்கு கூட தகவல்கள் தராமல் கூட்டங்களை நடத்த கூடிய ஒரு நிலை உள்ளது.இதற்கு தலைமை செயல் அலுவலர் இல்லாமல் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய சிஇஓ என்று சொல்லக்கூடிய தலைமை செயல் அலுவலர் இல்லாமல் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட கூடிய ஒரு நிலையில் அது எவ்வளவு அவலமான நிலை உள்ளது.மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி இருக்கக் கூடிய மாசி வீதிகளில் நடந்து சென்றபோது பார்க்க முடிகின்றது .அங்கு இருக்கக்கூடிய சாலைகள் எல்லாம் குழியும் பள்ளமுமாக என்று சொல்வதைவிட அதில் இருக்கக்கூடிய 6 அடி பள்ளமான சாலை தான் உள்ளது.இது போன்றுதான் 14 திட்டங்கள் 5 ஸ்மார்ட் சிட்டி மதுரையில உருவாக்கி இருக்கிறார்கள் இந்த 14 இடங்களை அரைகுறையாக தான் உள்ளது.மதுரை மாநகராட்சி ஒரு மிக முக்கியமான நகரம் அதிகமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வரக்கூடிய மதுரை மாநகர் அதனுடைய அவலநிலை எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த அளவுக்கு ஒரு திறமையற்ற அரசாக மக்களுடைய நலனில் அக்கறையில்லாத அரசாங்கமாக இருக்கின்றது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.இதேபோன்றுதான் தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களிலும் கூட இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல் படுத்துவதற்கான ஒவ்வொரு நகரத்திற்கும் அதிகாரிகள் என்று சொல்லக்கூடிய தலைமை செயல் அலுவலர்கள் இல்லாத ஒரு அவல நிலையை நாம் பார்க்கின்றோம்.மத்திய அரசு கொண்டு வரக்கூடிய பல்வேறு திட்டங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கேடு செய்யக்கூடிய வகையிலே இருக்கின்றது. அதனுடைய அதன் மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டாக தான் வேளாண் துறை குறித்த அந்த மூன்று சட்டங்கள் அமைந்திருக்கிறது.இதற்கிடையில் இன்றைக்கு மருத்துவக் கல்லூரிகளை இந்த நாட்டிலே நம்முடைய நாட்டில் நடத்த வேண்டும் என்றால் அது வந்து லாப நோக்கமில்லாத அமைப்புகளால் தான் நடத்த முடியும்.மருத்துவக் கல்லூரிகள் நடத்தக்கூடிய ட்ரஸ்ட் அறக்கட்டளைகள் மெடிகல் கவுன்ஸில் ஆஃ இந்திய எட்டாவது பிரிவு தொடர்பான சட்டங்களும் எட்டாவது பிரிவின் அடிப்படையில் லாப நோக்கமில்லாத அறக்கட்டளைகள் தான் மருத்துவக் கல்லூரியை நடத்த முடியும்.ஆனால் தற்போது மோடி அரசு அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவ நிலையங்களும் உதாரணமாக போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவ மருத்துவமனைகளும் கூட ஒரு டீம் யூனிவர்சிட்டி என்று சொல்லக்கூடிய நிகர்நிலை பல்கலைக் கழகத்துடன் இணைந்து மருத்துவக் கல்லூரியாக மாறலாம் என்ற ஒரு விதிமுறையை திருத்தத்தை கொண்டு வந்து முற்றிலுமாக லாப நோக்கம் இல்லாமல் செயல்படக்கூடிய அறக்கட்டளைகளுக்கு மட்டும்தான் மருத்துவக் கல்லூரி நடத்தக்கூடிய உரிமை அளிக்கப்படும் என்ற அந்தச் சட்டத்தை மோடி திருத்தி இருக்கிறார் இதன் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிப்பது மேலும் பகல் கனவாக மாறும் சூழலலா க உள்ளது.இந்த நாட்டினுடைய அரசு மோடி அரசு .எந்த அளவுக்கு கார்ப்ரேட்டுக்கு இசைவாக செயல்படுகின்றது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.தொடர்ச்சியாக தமிழகத்தினுடைய உரிமைகளை எல்லாம் பறிக்கக் கூடிய வகையிலே தான் எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பட்டு வருகிறது இந்த அரசு மாறினால்தான் தமிழகத்தினுடைய உரிமை வழக்கமாக இருக்கக்கூடிய மாநில சுயாட்சி சமூக நல்லிணக்கம் சமூக நீதி இந்த மூன்றையும் நிலைநாட்ட முடியும்.அர்னால்ட் கோஸ்வாமிக்கு புல்வாமா தாக்குதல் குறித்த செய்தி அளித்தது யார்?அந்த நிறுவனத்திைடைய தலைவருடன் அவர்கள் செய்த வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் அதை அம்பலப்படுத்தி இருக்கிறது.இதை சாதாரணமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது நிச்சயமாக ஒவ்வொரு அமைச்சரும் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டுதான் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.கோஸ்சாமிக்கு பாலக்கோட்டில் இன்னும் சில நாட்களில் தாக்குதல் நடத்த போகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து நடத்தப் போகிறோம் என்ற தகவல் கசிய விட்டது யார்.அப்படி கசியவிட்ட அவர்கள் நிச்சயமாக தேசத் துரோகிகள் தான் இருக்கிறார்கள் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தபட வேண்டும்ஆனால் சாமி மட்டுமல்ல ஆனால் அந்த தகவலை கொடுத்தவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.திருமதி சசிகலா நடராஜன் அவர்கள் உடல் நிலை குறித்த செய்தி ஐயத்தை எழுப்புகிறதுஅவர் பரிபூரணமாக குணமடைந்து அவர் விடுதலையாக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருக்கின்றது.ஆனால் பரவலாக அவருடைய அரசியல் வருகை யாருக்கு ஆபத்தாக முடியும் என்றால் பாஜக வுக்கும் ,எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆபத்தாக முடிய கூறியதாக அவர்கள் கருதுகிறார்கள்.எனவே இதனை ஒரு சதி இருப்பது போல ஒரு சந்தேகம் வலுவாக எழுகின்றன.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அதிமுக அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்க வில்லை,
மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற மோடி அரசுடன் கூட்டுச் சதி செய்து வருகின்றார் என்பதுதான் எதார்த்தமான ஒரு சூழலாக இருக்கின்றது.தமிழக இளைஞர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் பறி போயிருக்கக் கூடிய ஒரு சூழலை பார்க்கின்றோம்.எனவே நாங்கள் வேலை வாய்ப்புகளை தமிழக மக்களுக்கு உருவாக்கி இருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொல்வது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கின்றது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.மாநில மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் .இந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இழந்துவிட்ட பல்வேறு உரிமைகள் எல்லாம் மீட்கப்பட வேண்டும் என்று எங்களுடைய அணி வெற்றி பெறும்கூட்டணி மற்றும் தொகுதிகள் குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும்.இடங்கள் எவ்வளவு என்று சொல்ல முடியாது அதிகமாக மக்களுடைய பிரச்சினைகள் எடுத்திருக்கின்ற செல்லக்கூடிய . சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் வேண்டும் அதற்காக கூடிய கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஜனவரி 22ஆம் தேதி அந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மீறி நடத்தினால் நான் அதனை மிக அருமை எதிர்ப்பை தெரிவிப்போம் என கூறினார்பாஜக கட்சி சிறுபான்மையினர் நலனுக்கு எதிராகத் தான் உள்ளது 1957இல் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் முறையைப் பின்பற்றித்தான் தற்போதைய பாஜக வின் புதிய கல்விக் கொள்கை திட்டம் உள்ளது பாஜகவின் எந்த ஒரு செயலும் சிறுபான்மை நலனுக்கு எதிராகத் தான் உள்ளது என ஜவாஹிருல்லா கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image