எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தால் மக்களுக்கு நல்லது கிடைக்கும் என நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் திறந்து வைத்தார். விழாவில் பேசிய தேன்மொழி சேகர் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் படும் இன்னல்களை அறிந்து அவர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வந்தார். குறிப்பாக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை உயர்த்தி வழங்குதல், கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கியது மட்டுமல்லாது, உயர்தர சிகிச்சை கிராமப்புற மக்களுக்கும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய தாய்மார்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நவீன மயமாக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை அவர் வழி வந்த அரசை முன்னெடுத்து செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக்குகளை திறந்து வைக்க திட்டமிட்டு தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் 200 மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் 7 மணி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை கூறிக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான திட்டங்கள் மூலம் முழுமையான பயன் கிடைக்க வேண்டுமென்றால் புரட்சித்தலைவி அம்மா வழிவந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய ஆட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று விழாவில் பேசினார். மேலும் விழாவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் ஊராட்சி தலைவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply