
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவிற்கு முகூர்த்தத்கால் நடும் விழா, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். இதற்காக இன்று
அலங்காநல்லூரில் முகூர்த்த கால் ஊண்டும் விழா வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,,மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்