
மதுரை ஊமச்சிகுளத்தில் பொன்னுத்தாய் என்கிற 60 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வருகிறார், இன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவர் அரிவாளை கொண்டு வெட்டி உள்ளார், இதை தடுக்க வந்த பக்கத்து விட்டு பெண்ணான பஞ்சு என்கிற பெண்ணையும் முத்துச்செல்வம் வெட்டி தலை முடியை அறுத்து வீசி உள்ளார், இதில் சம்பவ இடத்திலேயே பொன்னுத்தாய் உயிரிழந்தார், வெட்டு காயங்களுடன் பஞ்சு சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், தகவல் அறிந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி சுஜித்க்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார், முதல் கட்ட விசாரணையில் பொன்னுத்தாய்க்கும் முத்துச்செல்வத்துக்கும் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சண்டை காரணமாக இக்கொலை நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர், மேலும் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட அரிவாள் மற்றும் முத்துச்செல்வத்தின் செல் போனை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர், கொலை செய்து விட்டு தப்பியோடிய முத்துச்செல்வத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்