
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடிப் பேட்டையை சேர்ந்த யுவராஜ். இவர் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நதியா (30) மகள்கள் நிவேதா (10) அஸ்வினி (7) குடியாத்தம் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் குடியாத்தம் கவுண்டன்ய ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றனர்.. தரைப்பாலத்தில் இறங்கி நின்ற போது வேகமாக வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டனர். மூழ்கியை இறந்த 3 பேரையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர் இது குறித்து குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
வேலூர்