
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் நாடக மேடை அமைத்துக் கொடுக்க வேண்டி மாணிக்கம் எம்எல்ஏ இடம் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் கொரோனோ தொற்றுநோய் ஊரடங்கு உத்தரவால் நாடக மேடைக்கு நிதி ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது இதற்கான சூழ்நிலை இருப்பதாகவும் மாணிக்கம் எம்எல்ஏ கூறினார் இதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இங்கு நாடகமேடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது இவ்விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் தலைமை தாங்கினார் கிளைச் செயலாளர் பால்பாண்டி முன்னாள் செயலாளர் ஜெயபாண்டி இப்பகுதி செயலாளர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா சோழவந்தான் நகர செயலாளர் கொரியர் கணேசன் வரவேற்றார் அதைத் தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் பூஜைகள் செய்து பூமி பூஜை நடந்தது இதில் கலந்துகொண்ட மாணிக்கம் எம்எல்ஏ கட்டிடம் கட்டுவதற்கான முதல் செங்கல் கல்லை சாமி கும்பிட்டு எடுத்து வைத்தார் பின்னர் நடந்த கூட்டத்தில் சோழவந்தான் தொகுதியில் கடந்த நாலரை ஆண்டுகளில் தான் கொண்டு வந்த திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார் இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பஞ்சவர்ணம் ராமலிங்கம் கார்த்திகா ஞானசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் முன்னாள் கவுன்சிலர் முனியாண்டி காடுபட்டி நிர்வாகிகள் கணபதி டீக்கடை ராஜா வடகாடு பட்டி கணேஷ் பிரபு மன்னாடிமங்கலம் ஜெ பேரவை செயலாளர் ராஜபாண்டி கண்ணுச்சாமி முள்ளிப்பள்ளம் நிர்வாகிகள் சேது கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் கிராமத்தின் சார்பாக சின்னசாமி நன்றி கூறினார்..
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்