
மதுரையிலுள்ள கோவில் யானைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி மற்றும் அழகர்கோவில் யானை சுந்தரவள்ளி தாயார் ஆகிய யானைகளை கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராஜதிலகன் உத்தரவின் பேரில் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் சரவணன் மேற்பார்வையில் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்கள் முத்துராமலிங்கம், கங்கா சூடன், உமா மகேஸ்வரி, ஆகியோர் ஆய்வு செய்து கொரோனா பரிசோதனை, உடல் நல பரிசோதனை செய்தனர். மேலும் ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது.
வி காளமேகம் மதுரை மாவட்டம்