Home செய்திகள் மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சமாதான கூட்டம்

மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சமாதான கூட்டம்

by mohan

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் கடந்த 29ம் தேதி மதுரை மாவட்ட கலெக்டர் இடம் வார்டு உறுப்பினர்கள் ஜாதி வித்தியாசம் பார்ப்பதாகவும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முரண்பாடாக நடப்பதாகும் ஆயுத பூஜை அன்று பூஜைகள் செய்ய அனுமதி மறுத்ததாகவும் புகார் தெரிவித்தார் இது குறித்து அன்று மாலையே மேலக்கால் ஊராட்சி அலுவலகம் முன்பாக வார்டு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதன்பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஊராட்சி உதவி இயக்குனர் சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் இக்கூட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் ஆணையர் சாந்தி ராணி தலைமையில் நடந்தது ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை இரு தரப்பினரிடமும் விசாரணை செய்தார் இதில் இருதரப்பினரும் தவறான புரிதல் காரணமாக புகார் கொடுத்து உள்ளனர் இதில் தலைவர் கொடுத்த புகாரில் எந்த வித ஆதாரம் இல்லை வார்டு உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்யப்படும் ஊராட்சி நிர்வாகம் சீராக நடப்பதற்கு முன் ஊராட்சி திட்டங்கள் மக்களிடையே போய்ச் சேர்வதற்கும் இருதரப்பினரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது இதுகுறித்து வார்டு உறுப்பினர் கதிரவன் கூறுகையில் எங்களது மேலக்கால் ஊராட்சியில் இதுவரை 10 கூட்டங்கள் நடந்துள்ளன 6 கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுத்தோம் மீதி நான்கு கூட்டங்களில் கிராம மக்கள் கூறிய புகார்களை எடுத்துக் கூறி விளக்கம் கேட்டோம் விளக்கம் தராததால் நாங்கள் கூட்டத்தில் கையெழுத்துப் போடவில்லை இதுகுறித்து அதிகாரிகள் இடம் புகார் தெரிவித்தோம் இதை தெரிந்து கொண்ட தலைவர் முருகேஸ்வரி மாவட்ட கலெக்டரிடம் எங்களைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினார் இதை தெரிந்து கொண்ட நாங்கள் அன்று மாலையே ஊராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம் எங்களது புகாருக்கு பதில் அளிக்காமல் பொய்யான குற்றச்சாட்டுகள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ளார் இதன் பேரில் மாவட்ட கலெக்டர் ஊராட்சி உதவி இயக்குனர் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார் இதன் பேரில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசாரணை நடந்தது விசாரணை செய்த உதவி இயக்குனர் தலைவர் கூறிய புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறினார் நாங்கள் கொடுத்த புகாருக்கு விசாரணை செய்வதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!