
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சோழவந்தான் அருகே காடுபட்டியில் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர் , மாவட்ட விவசாய அணி வக்கீல் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். காடுபட்டி பொறுப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பசும்பொன் மாறன் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். காடுபட்டி கிளைச் செயலாளர் வரதன் நன்றியுரை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகா வீரபாண்டி, தனலட்சுமி கண்ணன், தனபால் ,மற்றும் நிர்வாகிகள் வெற்றிச்செல்வன், மன்னாடிமங்கலம் பவுன் முருகன், தமிழ்மாறன், கேபிள் ராஜா, ஊத்துக்குளி ராஜா, மணிவேல், பேட்டை கண்ணன், மற்றும் இளைஞரணி கிளைக் கழக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்