ஒரே நாளில் மூன்று ஊர்களில் மூன்று வாகனங்களில் பேட்டரி திருட்டு :

மதுரை மாவட்டம்சோழவந்தான் பகுதியில் இரவில் நிறுத்திய வாகனங்களில் பேட்டரிகள் திருடு போய் உள்ளன.
இது குறித்து , போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
திருவேடகம் அப்துல் ஜபார் 50 இவருக்கு சொந்தமான மினி லாரியில் பேட்டரி இரவில் காணாமல் போயுள்ளது. இதேபோல் , பச்சமுத்து சிவ பாண்டி 45 இவருக்கு சொந்தமான மினி லாரியும் பேட்டரி திருடு போயுள்ளது .அன்று இரவே சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலகுரு 36 என்பவருக்கு சொந்தமான 2 லாரிகளிலும் பேட்டரி திருடு போயுள்ளது .இதுகுறித்து ,பேட்டரியை
பறிகொடுத்தவர்கள் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.ஒரே இரவில் மூன்று ஊர்களில் 3 வாகனங்களில் பேட்டரி திருடிய மர்ம கும்பலை வலை வீசி வீசி தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image