Home செய்திகள் சுரண்டையில் உலக பேரிடர் மீட்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

சுரண்டையில் உலக பேரிடர் மீட்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

by mohan

உலக பேரிடர் மீட்பு தினம் தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி தாசில்தார் தலைமையில் நடந்தது.உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு வீரகேரளம்புதூர் வருவாய்த் துறை, சுரண்டை தீயணைப்பு நிலையம், மற்றும் தென்காசி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பேரிடர் கால மீட்பு குறித்து பயிற்சி விளக்கம் வீகேபுதூர் தாசில்தார் முருகு செல்வி தலைமையில் நடந்தது.தென்காசி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் ரமேஷ், துணை தலைவர் முத்துகிருஷ்ணபேரி இந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் சாம் அல்போன்ஸ்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை ஆர்ஐ மாரியப்பன் வரவேற்றார். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் தீவிபத்து, வெள்ளம், கட்டிட இடிபாடுகள், விபத்து, இயற்கை சீற்றங்கள், உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் மற்றும் மருத்துவ துறையினர் சேவைகளை பெறுவது, தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தற்காத்துக் கொள்ளுதல், அவசர முதலுதவி பெறுதல் குறித்து கூறி செய்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பாலகிருஷ்ணன், ரவீந்திரன், சாமி, ராஜேந்திரன், மாடசாமி, உலகநாதன், திலகர், வெள்ளைப்பாண்டி, பொன்ராஜ், உதயபிரகாஷ், விஏஓக்கள் டெல்பின் சோபியா, தர்மராஜ், பாலு, வெள்ளைப்பாண்டி, விஜி, கிராம உதவியாளர்கள் பரமசிவன், ஜேம்ஸ், கற்பகம், மாரியம்மாள், அரசு போக்குவரத்து கழக அலுவலர் சங்கரன்,  கண்ணன், குமார், ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் ரெட்கிராஸ் செயலாளர் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!