ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை விவகாரம். ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கிய கிராமத்தினர்.

மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக இன்று இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான குன்னத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்துச்சென்றனர் இந்த நிலையில் குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றி வரும் செயலாளர் வீரணன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இந்நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவருடைய வீட்டை ஊர் பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர் சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image