மதுரை மாநகராட்சியைக் கண்டித்து ஹார்வி பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்……

திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியில் தெருவிளக்கு எரியாமல் இருளில் மூழ்குவதால் மதுரை மாநகராட்சியைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அரிகேன் விளக்கு, மெழுகு திரியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி நகர், உள்ளிட்ட விஸ்தரிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கைகளில் அரிக்கேன் விளக்கு , மெழுகுவர்த்தி ஏந்தி ஹார்விபட்டி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் விஜயா, தாலுகா குழு உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்