உசிலம்பட்டி தொகுதி மக்களின் கனவு திட்டமான 58 கால்வாய் தற்போது செயல் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர் . பி . உதயகுமார் பேட்டி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் அருகே மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்திற்கு செல்லக்கூடிய இணைப்பு கால்வாய் உள்ளது. இந்த இணைப்பு கால்வாய் வைநேற்று தமிழகத்தின் வருவாய் துறை அமைச்சர் ஆர். பி . உதயகுமார் திறந்துவைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியாவது : இன்றைக்கு தமிழக முதலமைச்சர் தமிழக துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள திருமங்கலம் கால்வாயின் முனைப்பு பகுதியின் கால்வாயை திறந்து வைத்துள்ளேன். இந்த நீர் திறப்பின் மூலம் உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 430 ஏக்கர் பயனடைய உள்ளது. விவசாய பாசனத்திற்காக சுமார் கிட்டத்தட்ட 120 நாட்களுக்கு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் உசிலம்பட்டி தொகுதியின் நீண்டகால மக்களின் கனவு திட்டமான வெகுவிரைவில் 58 கால்வாய் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகளை சரிசெய்ய சீரமைப்பு பணிகள் வெகுவிரைவில் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இந்த திட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதி மக்களின் கனவு திட்டமானது தற்போதைய செயல் வடிவம் திட்டமாக நிறைவேற்றுவதற்கு அனைத்தும் வழிமுறைகளையும் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து செய்துள்ளோம் . இது பற்றிய முழு விவரம் தெரிய வேண்டும் என்றால் வாங்க இப்படியே நேரடியாக சென்று ஆய்வு செய்வோம் என நிருபர்களிடம் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய இந்தத் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகளிடம் குறுகியகாலப் நெற்பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொண்டார். அதேபோன்று வரலாற்றில் இடம்பெற்று உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட பாதிப்பை போக்கும் விதமாக அதிவிரைவில் வீரவசந்த ராயர் மணிமண்டபம் ஒரு லட்சம் கன அடி கல் தேவைப்படுவதால் தற்போது கொரானா காலம் என்பதால் சற்று கால அவகாசம் ஏற்பட்டாலும் விரைவில் அப்பணி அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருப்பதால் நிச்சயமாக செய்து தரப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறினார். அப்போது உடன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர். வி.என். கண்ணன், நிலக்கோட்டை கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன், நிலக்கோட்டை மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, மதுரை மண்டல பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சுகுமாறன், நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனி ராஜா, முன்னாள் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image