ஆன்லைன் மோசடி குறித்து கவனமாக இருக்க வேண்டும்-நெல்லை காவல் உதவி ஆணையர் பொது மக்களிடையே விழிப்புணர்வு…

நெல்லையில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொது மக்களிடையே அதிக கவனத்தை ஏற்படுத்தும் வகையிலும் நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சேகர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான நெல்லைப்பர் கோவில் முன்பு மக்கள் மத்தியில் காவல் ஆணையர் கூறியதாவது:பொது மக்கள் தங்கள் பஸ் பயணத்தின் போது நகைகளையும் பர்ஸ் ஆகியவற்றை கவனமாகக் கொண்டு செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும் போதுக செல்போன்கள் பேசக்கூடாது, தலைக் கவசம் அணிந்து செல்ல வேண்டும், வீட்டில் அறிமுகம் இல்லாத நபர்கள் சந்திப்பதைத் தவிர்ப்பது, முகநூலில் தங்கள் போட்டோக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போட்டோக்களை பதிவேற்றம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நகைகளை வெளியே தெரியும் வகையில் அணிந்து செல்லக்கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும், பெண்கள் காவலன் செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடிகள் அதிகமாக நடந்து வருவதால் பாதுகாப்பான முறையில் பணம் பரிமாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். முக கவசங்களை வீடு தேடி வந்து விற்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறிய காவல் ஆணையர் சேகர், ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது வெளி நபர்களின் உதவியை நாடாமல் இருப்பதும் , கொரோனா காலத்தில் மக்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் டவுண் குற்றப்பிரிவு ஆய்வாளர் , உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image