நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தானாக முன்வந்து கொரானா பரிசோதனை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் .தேன்மொழி சேகர் நேற்று நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என பரிசோதனைக்கு தனது ரத்த மாதிரி சோதனையை நிலக்கோட்டை அரசு மருத்துவ தலைமை மருத்துவர் கணேசன் தலைமையில் நடந்த முகாமில் பரிசோதனையில் சோதனைக்காக தானாக முன்வந்து கொடுத்தார். அப்போது நிலக்கோட்டை அதிமுக பேரூராட்சி நகர செயலாளர் சேகர், நிலக்கோட்டை அரசு மருத்துவமனை நுரையீரல் பிரிவு மருத்துவர் சேகர், மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் கூறியதாவது. வருகிற 28 ந்தேதி சென்னையில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கட்சி கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அதிமுக கட்சி நிர்வாகி என்ற முறையிலும் கலந்து கொள்ள இருக்கிறேன். ஆகையால் அதற்கு முன்னதாக தற்போது உலகை அச்சுறுத்தி வரக்கூடிய கொரானா என்ற கொடிய நோயின் தாக்கம் எனக்கு இருக்கிறதா என தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டேன் என தெரிவித்தார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image