ஸ்டாலின் காணாமல் போன கட்சிக்கு காணொளி காட்சி மூலம் செயற்குழு பொதுக்குழு நடத்தி வருகிறார் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நகர செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் படிவம் வழங்கி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் மூலம் கட்சியை நடத்தி வந்தார். தற்போது தனித்தனி அணியாக இளைஞரணி இளம்பெண்கள் பாசறை உள்ளிட்ட தனித்தனி கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இன்னும் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கட்சியினர் பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏதுமறியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காணாமல் போன திமுக கட்சிக்கு செயற்குழு, பொதுக்குழு காணொலிக் காட்சி வாயிலாக நடத்திவருகிறார். பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திட்டங்களை துவக்கி வைத்து செயல்படுத்திய போது விமர்சனம் செய்த ஸ்டாலின் இப்போது காணொலி காட்சி வாயிலாக செயற்குழு, பொதுக்குழு நடத்திவருகிறார். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எட்டு மாதம் கழித்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சவாலான பணியை மேற்கொண்டு திறம்பட செய்து வருகிறார்கள் என்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆர்யா ,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் ,கழக அவைத்தலைவர் ஐயப்பன், இளைஞரணி மாவட்ட செயலாளர் கவி காசிமாயன் மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி ,முன்னாள் யூனியன் துணை தலைவர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன், மாணவரணி வக்கீல் கார்த்தி, பேரூராட்சி முன்னாள் சேர்மன் முருகேசன், மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி , கேபிள் மணி, சிலம்பு செல்வன், சங்கங் கோட்டை சந்திரன், வணங்காமுடி, தியாகு ,அசோக் சங்கையா முன்னாள் கவுன்சிலர் பெருமாள் ராஜா செழியன் ஜூஸ் கடை கண்ணாடி டீக்கடை கணேசன்ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image