Home செய்திகள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்…

by mohan

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உயிர் காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்ட பொதுமக்கள், தங்களது பகுதிகளில், மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மிகவும் பழுதடைந்து இடியும் தருவாயிலான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் வயல் வெளிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் கம்பங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சேதமடைந்த மற்றும் வளைந்து கீழே சாய்ந்து விழும் நிலையில் காணப்படும் மின் கம்பங்கள், தாழ்வான நிலையில் செல்லும் அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை கண்டறிந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077 அல்லது 04633-290548 மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுலக பேரிடர் மேலாண்மை முகமை மின்னஞ்சல் முகவரி [email protected] தொவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மழைகாலங்களில் மண் சுவரிலான குடிசை வீடுகள், மிகவும் பழமையான வீடுகள், நீரோட்டம் மிகுந்த கால்வாய் ஒரமாக உள்ள வீடுகள் மற்றும் வெள்ளநீர் செல்லும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு உள்ள மக்கள் மற்றும் பகுதிகளைப் பற்றியும் 1077 அல்லது 04633-290548 என்ற எண்ணிற்கு அழைத்தும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!