Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர் பிறந்த நாள் விழா-நெற்கட்டும் செவல் பூலித்தேவர் சிலைக்கு அமைச்சர் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை..

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர் பிறந்த நாள் விழா-நெற்கட்டும் செவல் பூலித்தேவர் சிலைக்கு அமைச்சர் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை..

by mohan

சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் 305-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ராஜலெட்சுமி, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 305-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவர் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன், எம்.எல்.ஏ.,கள் தென்காசி செல்வமோகன்தாஸ் பாண்டியன், வாசுதேவநல்லூர் மனோகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் சங்கரன்கோவில் கோட்டாட்சித்தலைவர் முருகசெல்வி, கன்னியாகுமரி மாவட்ட ஏடிஎஸ்பி ஈஸ்வரன், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, வேலம்மாள், வட்டாட்சியர் ஆனந்த், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மைதீன் பட்டாணி, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் குட்டியப்பா (எ) கிருஷ்ணமுரளி, அதிமுக பேரூர் செயலாளர்கள் வாசுதேவநல்லூர் சீமான் மணிகண்டன், ராயகிரி சேவுகப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வாசு.,மூர்த்திபாண்டியன், சங்கரன்கோவில் ரமேஷ், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் மாங்கனி முருகையா, முன்னாள் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் துரைபாண்டியன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு பூலித்தேவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பூலித்தேவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புளிங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக பூலித்தேவர் திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவிக்க அனுமதிக்கப்படவில்லை.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!