உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் குடும்ப பிரச்சனையில் கணவன் மனைவி தீக்குளிக்க முயற்ச்சி.மனைவி உயிாிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசைய்யா மகன் ஜெயராமன்(38). இவரது மனைவி கனி(32).இவர்களுக்கு இரு குழந்தைகள் (ஆண்-பெண்) உள்ளனர். கணவர் ஜெயராமன் சொந்தமாக லாரி வைத்துளளார். வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு, வாரத்தில் ஒரு நாள் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளர். வீட்டுக்கு வந்து செல்லும் அந்த ஒருநாளும் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மனைவி, குழந்தைகளுடன் பேசாமல் திரும்பவும் வேலைக்கு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. இதனை மனைவி கனி கண்டித்துள்ளர். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இன்றும் வழக்கம் போல் தகராறு ஏற்பட கணவன் மனைவி இருவருமே தங்கள் மேல் மண்எண்ணைய் ஊற்றி தீ வைத்தனர்.
அலறல் சத்தம் கேட்டு; இரண்டு குழந்தைகளும் காப்பாற்ற முயன்ற போது அவர்கள் மீது தீப்பற்றியது.இதில் மனைவி கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதில் கணவர் ஜெயராமன், மகள் தர்ஷினி (12) , மகன் கவின் (15) ஆகிய மூவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தந்தை ஜெயராமன் ,மகன் கவின்ஆகிய இருவரையும் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மகள் தர்ஷினிக்கு சிகிச்சையளிக்கப்பட:டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சேடபட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image